மேஷம்-உடல் ஆரோக்கியம்
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். பெரிய விபத்துக்களில் இருந்தும் தப்பித்து விடுவர். நோயும் இவர்களை எளிதாக தாக்காது. சிறாராக இருக்கும்போது இவர்களுக்கு பல உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கும். ரத்த சோகை, கண் நோய், காய்ச்சல், அல்சர், டய்ஃபாய்ட், கை, கால்களில் வெட்டுப்படுதல், உணவினால் ஏற்படும் ஒவ்வாமை பேன்றவை இவர்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இவர்களுக்கு மன அமைதி குறைவாகவே இருக்கும். எனவே மேஷ ராசிக்காரர்கள் ஆத்மார்த்தமான செயல்களை செய்வது நல்லது. எப்போதும் கடின உழைப்பை மேற்கொள்வதால் உடல் வலி ஏற்படும். இதனால் யாரைக் கண்டாலும் எரிந்து விழும் நிலை ஏற்படும். இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வாய்ப்பும் உண்டு. இவர்கள் சுதந்திரமாக வாழவே விரும்புவர். இவர்கள் உப்பு பதார்த்தங்களை விரும்பி உண்ணுவர். மேஷ ராசிக்காரர்கள் ரத்தத்தை சுத்திகரிக்கும் வகையிலான உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு பெரும்பாலான வியாதிகள் ரத்த சம்பந்தமானதாகவே இருக்கும். அடிக்கடி தண்ணீர் குடித்தல், மதியம் ஏதேனும் ஒரு பழ ரசம், இரவில் பால் அருந்துதல் நலம் தரும். மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஏற்படும் தினங்களில் விரதம் இருத்தல் சிறப்பு.

ರಾಶಿ ಫಲ